Uncategorized

ஆர் கண்ணன் இயக்கத்தில் தனஞ்செயன் வசனத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா!!

யக்குனர் ஆர்.கண்ணன் மற்றும் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் இணையும் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும். இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10 ஆக இப்படத்தை இயக்கி தயாரித்து வழங்கவிருக்கிறார்.

படத்தின் கதை கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ், மூவரும் இந்த திரைக்கதையை ஆலோசித்து 6 மாதங்களுக்கும் மேலாக உழைத்து, ஆர்.கண்ணனிடம் பைண்ட் ஸ்கிரிப்டை வழங்கியுள்ளனர். அவர், இன்று முதல் சென்னையில் படமாக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்.

ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு 3 மாதங்களில் முடிவடையும் என்று தெரிவித்துள்ளார்கள்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் பட்டியல்:

இயக்குனர் : ஆர்.கண்ணன் ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம் சண்டைப் பயிற்சி : ஸ்டண்ட் சில்வா
மக்கள் தொடர்பு : ஜான்சன்

Facebook Comments

Related Articles

Back to top button