தமிழ் சினிமாவில் புதிய இயக்குனர்களுக்கும் புதுமுக நடிகர்களுக்கும் பல வழிகளில் உதவி செய்து அவர்களை முன் கொண்டு செல்வதில் எப்போதும் அக்கறையாக உள்ளவர் தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.
அப்படியாக புதுமுகங்களாக கோலிவுட்டிற்கு அடியெடுத்து வைத்திருக்கும், ”சந்தோஷத்தில் கலவரம்” என்னும் படத்தின் படக்குழுவினரை வாழ்த்தி, அப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டும் உள்ளார் நடிகர் விஷால் அவர்கள்.
கார்த்தி பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீ குரு சினிமாஸ் மற்றும் திம்மா ரெட்டி தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் நிராந்த், ருத்ரா ஆரா, ஆர்யன், ஜெய் ஜெகன்னாத், ராகுல் சி கல்யாண், கெளதமி, ஷிவாணி இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அனைவரும் உற்சாகப்படுத்திய புரட்சித் தளபதி விஷால் அவர்களுக்கு படக்குழுவினர் சார்பாக நன்றியும் தெரிவிக்கப்பட்டது.