
கதையின் நாயகனான வருகிறார் நிவாஸ் ஆதித்தன். இவரின் மனைவி எஸ்தர். இவர்களுக்கு நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு மகன் இருக்கிறார்.
நிவாஸ் ஆதித்தன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். அவரது மனைவி எஸ்தர் தான் வேலைக்குச் சென்று குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறார். நிவாஸ் ஆதித்தன் வீட்டிலேயே இருந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டம் விளையாடி தனது பணத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல், பணத் தேவைக்காக ஆன்லைனில் இருந்து பணத்தை கடனாக பெறும் நிறுவனத்திடம் இருந்தும் பணம் பெறுகிறார்.
அதற்கு எந்த விதமான வட்டி கட்டவில்லை என்பதால், அதனை வசூலிக்க ப்ரைவட் ஏஜென்ஸியில் இருந்து அபிநய் மற்றும் ஆத்விக் இருவரும் நிவாஸின் வீட்டிற்கு வருகின்றனர்.

வட்டியும் அசலும் சேர்த்து பல லட்சம் ரூபாய் வருவதாகவும் அதனை உடனே செலுத்துமாறும் நிவாஸுக்கு இருவரும் நெருக்கடி தருகின்றனர். அந்த நெருக்கடியை நிவாஸ் எப்படி கையாண்டார் என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கின்றனர் நிவாஸ், அபிநய் மற்றும் ஆத்விக். இவர்கள் மூவருமே கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்திருக்கின்றனர். சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதனை அழகாக செய்து முடித்திருக்கிறார் எஸ்தர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி, ஆன்லைனில் கடன் பெற்று அதை கட்ட முடியாமல் இருக்கும் பலரின் கதைகளை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.
அதனால், என்ன மாதிரியான நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் கூறியிருக்கிறார். இதனைக் கண்டாவது எவரும் ஆன்லைன் சூதாட்டமோ அல்லது ஆன்லைனில் கடன் பெறுவதோ செய்யாமல் இருக்க வேண்டும்.

இது ஒரு விழிப்புணர்வு படமாகத் தான் பார்க்க வேண்டிய சூழல் உள்ளது.
இசையமைப்பாளர் ஜோ கோஸ்டா பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கிறார். ஒரே வீடு தான் காட்சியமைப்பு என்றாலும் பல இடங்களில் கேமராவை வைத்து காட்சிகளை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சபரி.
கேம் ஆஃப் லோன்ஸ் – விழிப்புணர்வு
CAST :
ABINAY KINGER as Vishwa
NIVAS ADITHAN as Daniel
ESTER NORONHA as Janet
ATHWIK JALANDHAR as Ashok
CREWS :
DIRECTOR : ABISHEK LESLIE
PRODUCER : N. JEEVANANTHAM JRG PRODUCTION
DOP : SABARI
EDITOR : D. PRADEEP JENIFER
ART : SAJAN
MUSIC DIRECTOR : JOE COSTA
ASSOCIATE DIRECTOR : VINO
ASSISTANT DIRECTOR : GLADSON
STORY : ABISHEK LESLIE
SCREENPLAY & DIALOGUES : ABISHEK LESLIE, SHIVA, SUBRAMANIAN, VINO
PRO : R MANI MADHAN





