Spotlightசினிமா

டாப் 100 பிரபலங்கள்…13 வது இடத்தில் ரஜினி..!! விஜய், அஜித் என்ன இடம் தெரியுமா..??

ந்திய அளவில் 2019-ம் ஆண்டில் டாப் 100 இடங்களில் உள்ள பிரபலங்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஊதியம் மற்றும் மக்களிடம் வரவேற்பை பெற்றதன் அடிப்படையில் டாப் 100 இடங்களை பிடிக்கும் பிரபலங்களின் பெயர்களை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய அளவில் இந்த ஆண்டுக்கான 100 பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடத்தில் உள்ளார். மற்றொரு கிரிக்கெட் வீரர் தோனி 5-வது இடத்திலும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் இந்தியா வரலாற்றில் ஒரு கிரிக்கெட் வீரர் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர்களான ரிஷப் பண்ட் (30வது இடம்), ஹர்திக் பாண்டியா (31), பும்ரா (33), கே.எல். ராகுல் (34), ஷிகர் தவான் (35), ஜடேஜா (51), குல்தீப் யாதவ் (61) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இதேபோல, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் மிதாலி ராஜ் (88), ஸ்மிருதி மந்தனா (90), ஹர்மன் ப்ரீத் கவுர் (91) ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

மேலும், பேட்மிண்டன் வீராங்கனைகள் பி.வி. சிந்து (63), சாய்னா நேவால் (81), கால்பந்து வீரர் சுனில் சேத்ரி (85), குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் (87), கோல்ப் விளையாட்டு வீரர் அனிர்பன் லஹிரி மற்றும் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா (98) ஆகியோரும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். இதில் ரஜினிகாந்த் 13ம் இடம் பிடித்துள்ளார். விஜய் 47வது இடத்திலும், அஜித் 52வது இடத்திலும் உள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button