மஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டார்ச் லைட்’. 90களில் நடக்கும் கதையான இது, நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கிய வேடத்தில் சதா நடித்துள்ளார். ரித்விகா, உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா, ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த ட்ரெய்லர் யூடியூப் பக்கத்தில் சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டு வருகிறது.
வரும் 7 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.
Facebook Comments