Spotlightவிமர்சனங்கள்

ட்ரிகர் – விமர்சனம்

கூர்கா, 100 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ட்ரிகர்”. பல படங்களில் தொடர்ந்து தனது திறமையை அதர்வா நிரூபித்து வந்தாலும், அவருக்கான இடமோ இன்னும் சரிவர கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். ட்ரிகர் அதர்வாவை தூக்கியது அல்லது சறுக்கி விட்டதா என்பதை படத்தின் விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

நாயகன் அதர்வா, போலீஸாக வருகிறார். ஒரு ஆபரேஷனில் தன்னிச்சையாக தனது முடிவை எடுத்ததால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இருந்தாலும், போலீஸ் டிபார்ட்மெண்டில் நடக்கும் தவறுகளை கண்காணிக்க ஸ்பெஷல் போலீஸாக அதிகாரியால் நியமணம் செய்யப்படுகிறார் அதர்வா.

இந்த சூழ்நிலையில், காணாமல் போன ஒரு குழந்தையை பற்றிய விசாரணையை அதர்வா தொடங்கும் போது, அது தொடர்ச்சியாக அடுத்தடுத்த பல மர்ம முடிச்சிகளை அவிழ்க்கிறது.

பல தலைகள் இந்த கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. கடத்தலை செய்பவர்கள் யார்? எதற்காக செய்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.

காக்கி உடை இல்லை என்றாலும், போலீஸுக்கான கம்பீரமும் தோற்றமும் திரையில் அப்படியே கொண்டு வந்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் அதர்வா. தான்யாவுடன் காதல் காட்சிகளோ, டூயட் பாடல்கள் இல்லை என்றாலும் ஒரு அழகான காதல் பயணம் புரிந்தது இருவருக்குள்ளும். அழகு தேவதையாக காட்சியளித்து ரசிக்க வைத்திருந்தா தான்யா.

போலீஸ் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும், இக்கதை மற்ற படங்களில் இருந்து தனித்து நிற்கிறது. இயக்குனர் சாம் ஆண்டன் இதுவரை தான் இயக்கிய படங்களிலும் தனக்கென ஒரு தனித்துவத்தை கதையில் கொண்டு வருவார். அதே, தனித்துவத்தை இப்படத்திலும் கொடுத்திருக்கிறார் சாம் ஆண்டன்.

திரைக்கதையின் நகர்வும் மிகவும் நேர்த்தியாக இருந்ததால், எளிதாக நம்மையும் கதையோடு பயணிக்க வைத்து விட்டார் இயக்குனர்.

இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு மேலும் பலமாக அமைந்தது. ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ட்ரிகர் – வேகம்

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close