Spotlightசினிமா

வாய்ப்புகள் எளிதில் கிடைப்பதில்லை – ‘தும்பா’வில் இணைந்தது பற்றி தீனா!

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த புதிய வரவுதான் ‘தீனா’. ஹரிஷ்ராம் இயக்கத்தில் ‘கனா’ புகழ் தர்ஷன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோருடன் இணைந்து ‘தும்பா’ படத்தில் நடித்திருக்கிறார் தீனா.

“இந்த வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை. பயிற்சி பட்டறைக்கு போய் என்னை நிரூபிக்க வேண்டியிருந்தது. படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்கள் நடிப்பு திறமையைப் பக்குவப்படுத்த வேண்டியிருந்தது. ஒன்லைன் காமெடி மற்றும் பஞ்ச் வசனங்களின் தலைமுறையில் வளர்ந்தவன் நான், இந்த படத்தில் எனக்கு அப்படிப்பட்ட விஷயங்கள் நிறைய உள்ளன. என் கதாபாத்திரத்தின் தன்மை எனக்கு நடிக்க ஒரு பெரிய வாய்ப்பை கொடுக்கும் என நான் நம்புகிறேன். ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்” என்றார் தீனா.

மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button