இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் தான் விடுதலை.
இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது. வரும் 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் இசைஞானி இளையராஜா. படத்தின் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தின் பாடலும் மிகப்பெரும் அளவிற்கு ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில், படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணியை மிக விரைவாகவே முடித்து விட்ட இளையராஜாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் வெற்றிமாறனும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் இளையராஜாவை நேரில் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
illaiyaraja, vetrimaran, viduthalai part 2