Spotlightசினிமா

50 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்த ‘வி1’… நல்ல படத்திற்கான மக்கள் ஆதரவு!!

டந்த வருடம் இறுதியில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று சிறந்த படமாக அங்கீகரிக்கப்பட்டு நல்ல வசூலையும் ஈட்டிய படம் ‘வி1’.

திரையரங்குகளில் வெற்றிகரமாக 25 நாட்களையும் கடந்து ஒடிய பிறகு வி1 திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிடப்பட்டது.

இவ்வருடம் மார்ச் 24 அன்று அமேசான் ப்ரைமில் வெளியான ‘வி1’ திரைப்படம் தற்போது 50 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் தங்களது மனமார்ந்த நன்றியை ‘வி1’ படக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தங்களது புதிய பட அறிவிப்பை மிக விரைவில் ‘வி1’ படக்குழு தெரிவிக்கவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button