
தமிழ் சினிமாவின் காமெடிக்கு நான் தான் ராஜா என்று ஒரு தனி ராஜாங்கமே நடத்திக் கொண்டிருந்தவர் நடிகர் வடிவேலு.
சில வருடங்களுக்கு முன் பிரபல கட்சியில் சேர்ந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் பிறகு சரிவர படங்கள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில், இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க எல்லா வேலைகளும் நடைபெற்று, சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஷங்கரோடு ஏற்பட்ட மோதலால், அப்படத்தில் தான் நடிக்க மாட்டேன் என்று விலகினார் நடிகர் வடிவேலு.
இதனால் பல கோடி ரூபாயில் போடப்பட்ட இம்சை அரசன் படத்தின் செட் முற்றிலும் பாழாக்கப்பட்டது.
இதனால், நஷ்ட ஈடு கேட்டு ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட, பேச்சுவார்த்தைக்கு சரிவர ஒத்துழைக்காததால் வடிவேலுக்கு ரெட் கார்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரபல முக்கியஸ்தரர் ஒருவர் வடிவேலுவுக்கும் ஷங்கருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்ததாம்.
இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படம் மீண்டும் எழ வாய்ப்பில்லையாம். ஆனால், சம்பளம் வாங்காமல் ஷங்கருக்கு இரண்டு படங்கள் நடித்து கொடுக்க வடிவேலு ஒப்புக் கொண்டுள்ளாராம்.
இதனால், வடிவேலுவின் அடுத்த படம் என்னவென்பது குறித்து சில நாட்களில் அப்டேட் வரலாம்..
மீண்டும் சுழன்றடிக்க வருகிறார் வைகைப் புயல்….