வடிவேலு நடிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்தான் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினார் ஷங்கர்.
இதற்காக பல கோடி மதிப்பீட்டில் செட் அமைக்கப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலே வடிவேலு அதில் இருந்து வெளியேறினார். பல மாதங்கள் ஆனதால் அந்த செட் வீணாகிப்போனதாக, வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர். மேலும், நஷ்ட ஈடாக 9 கோடி தர வேண்டும் எனவும் ஷங்கர் கோரியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு விளக்கம் கேட்டு பல கடிதம் வடிவேலுக்கு அனுப்பியும் இதுவரை எந்த தகவலும் வரவில்லை. இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ரெட் கார்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனி எந்த தயாரிப்பாளரும், இயக்குனரும் வடிவேலுவோடு பணியாற்ற கூடாது . வடிவேலுவை இனி திரையில் பார்ப்பது கஷ்டம் தான்.