
அஜித்குமார் நடிக்க ஹச் வினோத் இயக்க உருவான திரைப்படம் தான் “வலிமை”.
இப்படத்தினை அதிக பொருட்செலவில் போனி கபூர் தயாரித்திருந்தார். படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இருந்தாலும், அஜித் ரசிகர்களின் அமோக வரவேற்பால் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக படம் திரையில் ஓடிக் கொண்டிருந்தது.. தற்போது சில இடங்களில் ஓடிக் கொண்டும் இருக்கிறது.
இப்படத்தினை தமிழகம் முழுவதும் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச் செழியன் விநியோகம் செய்திருந்தார்.
அஜித்தின் வழக்கமான படத்தைக் காட்டிலும் ‘வலிமை’க்கு அதிகப்படியான விலை வைக்கப்பட்டது.
இதனால் பல முன்னணி ஏரியா விநியோகஸ்தரர்கள் தலை தெறிக்க ஓடினர். புதிய விநியோகஸ்தரர்கள் ‘வலிமை’ படத்தை அதிக விலைக்கு வாங்கி ரிலீஸ் செய்தனர்.
ஆனால், எதிர்பார்த்ததை போல படம் சரிவர செல்லாததால் படம் தோல்வியை தழுவியுள்ளது.. சராசரியாக ஏரியா விநியோகஸ்தரர்களுக்கு 25% இழப்பு ஏற்பட்டதாக நம்மிடம் பேசிய முக்கிய விநியோகஸ்தரர் கவலையுடன் இதைக் கூறினார்.
இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக இரண்டு விஷயத்தை அவர் நம்மிடம் கூறியது…
1. படத்தின் நீளம்
2. படம் பொங்கல் தினத்தன்று வெளிவராமல் போனது
இந்த இரண்டு காரணங்கள் தான் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று அவர் நம்மிடம் கூறினார்.
மேலும், கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படத்தின் வசூல் வைத்து படத்தை விநியோகம் செய்யாமல், அதிக விலைக்கு ஏரியா விநியோகம் செய்ததால், ஏரியா விநியோகஸ்தரர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளது வலிமை…
மேலும், இந்த தோல்வி குறித்து விநியோகஸ்தரர்கள் சிலர் அன்புச்செழியனிடம் கேட்டபோது அப்புறம் பார்த்துக்கலாம் என்று கூறிவிடுகிறாராம்.
ஏரியா மூலம் எடுத்த அனைத்து விநியோகஸ்தரர்களுக்கு இப்படம் 25% நஷ்டத்தை கொடுத்துள்ளது என்பது மறுக்க முடியா உண்மை.
ஒரு நடிகருக்கான மார்க்கெட் வேல்யூவை பொறுத்து படத்தினை விற்பனை செய்யுங்கள் என்று விநியோகஸ்தரர்கள் பலர் அன்புச்சேழியனிடம் முகம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வலிமை படம் 200 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் தமிழக விநியோகஸ்தரர்களும் லாபம் ஈட்டிக் கொடுத்திருக்கும் வலிமை, ஏரியா விநியோகஸ்தரர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.





