
ஆர் ஜே பாலாஜி மற்றும் சரவணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “வீட்ல விசேஷம்”.
பாதாய் ஹோ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கிறது இப்படம்.
சத்யராஜ், ஊர்வசி, ஆர் ஜே பாலாஜி, KPY புகழ் , அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு, போனிகபூர், ஐசரி கணேசன் , சத்யஜோதி தியாகராஜன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், மூத்த இயக்குனர்களான பி வாசு, கே எஸ் ரவிக்குமார் மற்றும் சுந்தர் சி இவர்கள் மூவருக்கும் மக்கள் இயக்குனர் என்ற விருது வழங்கிய கெளரவித்தது படக்குழு.
ரிலீஸுக்கு முன்பே படத்திற்கு நல்ல லாபம் கிடைத்திருப்பதாக ஆர் ஜே பாலாஜி கூறினார்.
வரும் 17 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments