
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
காதல், ரொமான்ஸ், நகைச்சுவை, டிராமா என அனைத்து அம்சங்களும் கலந்த முழுமையான ரோம்-காம் படமாக உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் கதைக்களம், குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என்பதை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது.
கவின் – நயன்தாரா கூட்டணி
திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞராக கவின் நடித்துள்ளார். பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் நயன்தாராவை கரம் பிடித்து, அவரைக் காதலிக்க வைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் டிரெய்லரில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
கவின் மற்றும் நயன்தாரா இடையேயான காதல் காட்சிகள், நகைச்சுவை தருணங்கள், உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பங்கள் என டிரெய்லர் முழுவதும் சுவாரஸ்யமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, முதன்முறையாக இணைந்துள்ள கவின் – நயன்தாரா ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
அனுபவம் மிக்க நடிகர்கள்
‘ஹாய்’ திரைப்படத்தில் மறைந்த இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனுபவம் மிக்க நடிகர்களின் நடிப்பும் டிரெய்லரில் கவனம் பெறுகிறது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன்
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.
பிரம்மாண்ட தயாரிப்பு
ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.
ஆகஸ்ட் 28-ல் திரையரங்குகளில் ‘ஹாய்’
ஏற்கனவே வெளியான ‘ஹாய்’ திரைப்படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
புதிய வெளியீட்டு அறிவிப்பின்படி, ‘ஹாய்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 28, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
டிரெய்லர்: https://www.youtube.com/watch?v=WKq3S2vvVEM





