Spotlightசினிமா

விவசாய வாழ்க்கையை கண்முன்னே கொண்டுவரும் ‘வெள்ளையானை’!

திருடா திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுப்ரமணியம் சிவா.

அதனை தொடர்ந்து பொறி , யோகி , சீடன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் . மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை, அசுரன் ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார் .தற்போது இவர் நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனியை வைத்து இயக்கியுள்ள படம் வெள்ளையானை.

இந்த வெள்ளையானை திரைப்படத்தை “WHITE LAMP TALKIES ” தயாரிப்பு நிறுவனம் சார்பில் S .வினோத் குமார் தயாரிக்கிறார் . இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா நடித்துள்ளார் .ஆத்மியா தமிழில் மனங்கொத்தி பறவை எனும் படத்தில் அறிமுகமாகினார் .

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் யோகிபாபு , E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,’சாலை ஓரம் ‘ ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் உணவை சார்ந்து இருக்கிறது . உணவு விவசாயத்தையும் , விவசாயியையும் சார்ந்து இருக்கிறது . விவாசாயம் நீரை சார்ந்துள்ளது. விவசாய வாழ்வின் அன்பையும் , வியர்வையையும் ஏமாற்றத்தையும் , கண்ணீரையும் , கோபத்தையும் நையாண்டித்தனமாகவும் , நகைச்சுவையாகவும் இயக்கியுள்ளார் இயக்குனர் சுப்ரமணியம் சிவா.

படத்தொகுப்பு – AL ரமேஷ் , கலை இயக்கம் ஜெகதீசன் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் உதவியாளராக இருந்த விஷ்ணு ரங்கசாமி இப்படத்திர்ற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயனின் தம்பி தினேஷ் சுப்பராயன் மேற்கொண்டுள்ளார் .

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது . விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button