Spotlightவிமர்சனங்கள்

வெந்து தணிந்தது காடு – விமர்சனம் 3.25/5

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் #Atman சிலம்பரசன் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்திருக்கும் படம் தான் “வெந்து தணிந்தது காடு”. அழகான காதலுடன் திரில்லர் மற்றும் ஆக்ஷன் கதைகளை உருவாக்குவது கௌதம் மேனனுக்கு கை வந்தகளையே, இப்படத்தில் எப்படிப்பட்ட காதலையும் ஆக்ஷனையும் கலந்து விருந்தளித்துள்ளார் என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.

கதைப்படி,

பட்டதாரியாக இருக்கும் முத்து வீரன்(சிம்பு) தனது கிராமத்தில் முற் காடுகளை பராமரித்து வருகிறார். அப்போது, திடீரெனெ தீ பற்றி எரிய அதிலிருந்து பல காயங்களுடன் தப்பிக்கிறார் முத்து. இதனை கண்ட முத்துவின் தாயார் ராதிகா அவரை மும்பைக்கு அனுப்ப முடிவு செய்கிறார்.

மும்பையிலுள்ள தனது மாமாவின் பரோட்டா கடைக்கு முத்து புறப்படவிருக்கும் நேரத்தில், ஒரு மிரட்டல் அழைப்புக்கு பயந்து திடீரென மாமா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்கிறார். மாமாவின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மும்பை புறப்படுகிறார் முத்து.

மும்பை சென்றபின் முத்துவின் வாழ்க்கையில் ஏற்படும் பல திருப்புமுனைகள் தான் படத்தின் மீதிக்கதை.

இப்படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து கதாபாத்திரத்திற்காக தன்னை அர்பணித்துள்ளார் சிம்பு. ஒரு பக்கம் தூக்கிய உதடு, காலை சாய்த்து நடப்பது, பயமறியாத கண்கள் என படம் முழுவதும் கதாபாத்திரமாகவே மாறி படத்தின் அழகை கூட்டியுள்ளர் சிம்பு. அவரின் நடிப்பிற்கான தீனி தான் இப்படம்.

அழகு தேவதையாக சில நிமிடங்கள் மட்டுமே வரும் சித்தி இதனானி, கேரக்டருக்கு தேவையான எமோஷன்களை கொடுப்பதில் கோட்டைவிட்டுவிட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

விக்ரம் படத்தில் கலக்கிய ஜாபர், இப்படத்திலும் கெத்து காட்டியுள்ளார். கம்மியான உயரமே, அவரை உச்சம் தொடச் செய்யப்போகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சரவணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்புக்குட்டி மிடுக்கான கதாபாத்திரமாக வந்து போகிறார்.

தன் படங்களில் காதல் காட்சிகளையும், ஹீரோயின்களின் கதாபத்திரத்தை மிக வலுவாக அமைக்கும் கெளதம் மேனன் இப்படத்தில் அதை மாற்றியமைத்தது ஆச்சர்யமே.

ஆனாலும், கேங்ஸ்டர் என்றாலே மும்பையில் தான் உருவெடுப்பர்கள் என்ற பிம்பத்தை தவறாது இவரும் ஃபாலோ செய்துள்ளார்.

ஆங்காங்கே தொய்வடையும் திரைக்கதையால் படத்தின் இரண்டாம் பாதியின் விறுவிறுப்பை குறைத்து விடுகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி படத்திற்கு வலுவாக அமைந்துள்ளது. ஒரே டியூன் கொண்ட பாடல் படத்தின் ஓட்டத்தை பாதிக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகமாக வந்து செல்கிறது.

படத்தின் அளவை குறைத்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

நாயகன், சத்யா, கே.ஜி.எஃப் என பல கேங்ஸ்டர் கதைபோல் தான் இப்படமும். அப்படியான ஒரு படத்திற்கு இரண்டாம் பாகம் தேவையா? என்ற கேள்வி.

இருந்துலும், முத்துவோடு ஒரு வெட்கை பயணத்தை நாமும் அனுபவிக்க பயணிக்கலாம் ஒருமுறை.

வெந்து தணிந்தது காடு – ரசிகர்களின் ஆகப்பெரும் எதிர்பார்ப்பை அணைக்க தவறியிருக்கிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close