
வெற்றிமாறனின் இயக்கத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்து தேசிய விருது பெற்ற படம் ‘அசுரன்’.
இப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படம் ‘விடுதலை’. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் சூரி நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.
இசைஞானி இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் பிரபல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறாராம்.
மிகப்பெரும் பொருளாக பேசப்பட்ட ஒரு நாவலை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.
சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரிடமும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments