
அஜித்குமார் மற்றும் தளபதி விஜய் இருவரும் நேருங்கிய நண்பர்கள் ஆவர். ஆனால், சமூக வலைதளங்களில் இவர்களது ரசிகர்கள் இட்டுக் கொள்ளும் சண்டைகள் முகம் சுழிக்க வைக்கிறது.
அந்த வகையில் இருவரின் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் விஜய்யும் அஜித்தும் சந்தித்துக் கொள்வது வழக்கம்.
சில வருடங்களாக அந்த மாதிரியான சந்திப்பு எதுவும் நிகழவில்லை. இச்சூழலில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை மகாபலிபுரம் அருகே நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்களாம். இவ்விழாவிற்காக குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்துள்ளார்களாம் தம்பதிகள்.
இந்நிகழ்ச்சியில் விஜய் மற்றும் அஜித் நேருக்கு நேர் சந்திக்கவிருக்கிறார்களாம்.