
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’. ஆக்ஷன் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை விஜய் ஆண்டனியின் சொந்த நிறுவனமான ‘Vijay Antony Music’ கைப்பற்றியுள்ளது.
தந்தை – மகள் இடையேயான பாசம், தியாகம் மற்றும் உணர்வுப்பூர்வமான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் படத்தொகுப்பு பணிகளையும் அவரே மேற்கொண்டுள்ளார்.
இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல விநியோகஸ்தர் 5 ஸ்டார் செந்தில் கைப்பற்றியுள்ளார்.
ஏற்கெனவே வெளியான படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில், விரைவில் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ திரைப்படம் நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





