Spotlightசினிமா

மிரளில் மிரள வைத்த இசையமைப்பாளர்… பின்னணியால் முன்னுக்கு வரும் பிரசாத்!

டந்த வெள்ளியன்று அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் வாணிபோஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மிரள்.

திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் பார்த்த அனைவரும் படத்தின் ஒளிப்பதிவையும் பின்னணி இசையையும் அதிகமாகவே பாராட்டி வருகின்றனர்.

படத்தின் வெளியீட்டுக்கு முன்னரே டீசரில் கொடுத்த பின்னணி இசையால் தமிழ் சினிமாவை ஒரு கனம் திரும்பி பார்க்க வைத்தவர் இசையமைப்பாளர் பிரசாத்.

டீசர் மற்றும் ட்ரெய்லரில் கொடுத்த அதே மிரட்டலான பின்னணி இசையை படம் முழுக்க கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து அசத்தியிருந்தார் பிரசாத்.

தமிழ் சினிமாவில் பின்னணி இசைக்கென்று ஒரு சில இசையமைப்பாளர்களே முன்னணி வகிப்பார்கள். அந்த வரிசையில் தற்போது பிரசாத்தும் இணைந்துள்ளார் என்கிறார்கள்.

மிரள் கொடுத்த வெற்றியால் தங்களது அடுத்த படத்திற்காக சில முன்னணி நிறுவனங்கள் பிரசாத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்களாம்.

Facebook Comments

Related Articles

Back to top button