Spotlightசினிமா

விஜய் சேதுபதி வெளியிட்ட ’கூத்தன்’ பாடல்!

சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘கூத்தன்’. இப்படத்தை எழுதி இயக்குகிறார் A L வெங்கி. அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இவர்களுடன்(பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம்,இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயாகிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒருதிரையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் பாலாஜி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு மாடசாமி,படத்தொகுப்பு பீட்டர் பாபியா, கலை சி.ஜி.ஆனந்த், நடனம் அசோக் ராஜா,சுரேஷ், நிர்வாக தயாரிப்பு மனோஜ் கிருஷ்ணா பணிபுரிந்துள்ளனர்.

கூத்தன் படத்தின் அறிமுகப்பாடலை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்கள் வெளியிட்டார். “கூத்தனம்மா கூத்தன், கூத்தனம்மா கூத்தன்” பாடலை வெளியிட்டு படக்குழுவினரை விஜய் சேதுபதி வெகுவாக பாராட்டினார்.

Facebook Comments

Related Articles

Back to top button