Spotlightசினிமா

விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு 202 பேர் உடல் உறுப்பு தானம்!

க்கள் செல்வன் விஜய் சேதுபதி இம்மாதம் 16ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.

இதற்காக, அவரது ரசிகர்கள் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம்,, கண் தானம், உடல் உறுப்புகள் தானம் போன்ற பல்வேறு உதவிகளை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக இன்று மாபெரும் உடல் உறுப்புகள் தானம் செய்தனர். இதில், சுமார் 202 பேர் மொத்தமாக வந்து தங்களது குடும்பங்களின் சம்மதத்தோடு தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அரசு மருத்துவ உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் அதற்கான சான்றிதழை அளித்தனர்.

இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக இதுவரை இத்தனை பேர் வந்து உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்து அதற்கான சான்றிதழை அளித்தது இதுதான் முதல் முறை.

Facebook Comments

Related Articles

Back to top button