
கிச்சா சுதீப்பின் நடிப்பில், அனுப் பண்டாரி இயக்கியுள்ள ‘விக்ராந்த் ரோணா’ திரைப்படம் ஜூலை 28 அன்று வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்போது இப்படம் சர்வதேச சந்தையில் பெரும் தொகையைப் பெற்று சாதனை படைத்துள்ளது. வெளிநாட்டு சந்தை விநியோகத்தை ‘One Twenty 8 media’ கைப்பற்றியுள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் கூறியபோது… ,
”இப்படத்தின் கதை உலகளாவியது என்பதை நான் எப்போதும் நம்பி வருகிறேன். உலகம் முழுவதும் மக்களின் உணர்வுகள் ஒன்றாகவே இருக்கும் இப்படத்தின் இந்த ஒப்பந்தம் அதற்கு ஒரு சான்றாகும். இப்படத்தின் விற்பனையில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளேன் மற்ற விவரங்களை விரைவில் அறிவிப்பேன். இப்படத்தின் விற்பனை ‘இது ஒரு கன்னடப் படத்திற்கான அதிகபட்சத்தை தாண்டியதோடு, மற்ற தென்னிந்திய மொழிகளுக்கு இணையாக உள்ளது.” என்றார்.
விக்ராந்த் ரோணா திரைப்படம் ஜூலை 28 ஆம்தேதி வெளியாகிறது. இயக்குநர் அனுப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி மற்றும் நீதா அசோக் நடித்துள்ள “விக்ராந்த் ரோணா” படத்தை ’ Zee studios வழங்க, Shalini Artss சார்பில் ஜாக் மஞ்சுநாத் தயாரிக்கிறார், Invenio Origins சார்பில் அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பு செய்துள்ளார்.





