
விஷால் ஆர்கே நகர் தேர்தலில் நிற்க போவதாக அறிவித்த உடனே கமல்ஹாசன் தான் விஷாலை களம் இறக்கி ஆழம் பார்க்கிறார் என்று செய்தி பரவியது. இதனை விஷால் மறுத்தார்.
இப்போது கமல்ஹாசன் வழியில் விஷாலும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆகிறார். தெலுங்கில் லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கிய ‘மேமு செய்த்தாம்’ என்ற நிகழ்ச்சியின் தமிழ்ப் பதிப்பைத் தொகுத்து வழங்கவுள்ளார் விஷால். சாமானிய மக்களின் கனவுகளை நிறைவேற்றித் தருகிற நிகழ்ச்சி இது. ஆந்திராவில் பெரிய வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி இது.
ஆகவே, தமிழிலும் இதற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் கருதுகின்றனர்.
Facebook Comments