Spotlightசினிமா

விஷால் நடிக்கும் ‘சக்ரா’..!!

விஷால் நடிக்க சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஆக்‌ஷன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இப்படத்தினை தொடர்ந்து எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஷால் நடித்து வந்தார். இதில் ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் நடிக்கின்றனர்.

விஷாலே இந்த படத்தை தயாரிக்கிறார். படத்துக்கு பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தது. சென்னை, கோவையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

தற்போது படத்துக்கு ‘சக்ரா’ என்று பெயர் வைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். படத்தில் விஷாலின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளனர். இது தொழில்நுட்ப திகில் படமாக சக்ரா தயாராகி உள்ளது. தேசப்பற்று, குடும்ப சென்டிமென்ட், அதிரடி ஆகியவையும் படத்தில் உள்ளன.

இந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக வருகிறார். தொடர்ந்து இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close