
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்றார்.
கமல்ஹாசனின் இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிலையில், தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது,
“கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும். அவருக்கு நாக்கில் தற்போது சனி இருக்கிறது. தீவிரவாதத்துக்கு ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் என்று மதம் கிடையாது. அவர்களை தீவிரவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும். சிறுபான்மையினர் வாக்கை பெறுவதற்காக இவ்வாறு பேசும் கமல்ஹாசனின் நாக்கை ஒருநாள் அறுக்க தான் போகிறார்கள். கமல்ஹாசன் வாயில் இருந்து வருவது அனைத்தும் விஷமாக உள்ளது. கமல்ஹாசன் விஷத்தை கக்குகிறார்.” என்றார்.





