
விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் விற்பனையை இறுதி செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சக்ரா படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30 வரை நிறுத்திவைக்க வேண்டும்.
தங்களிடம் கூறிய கதையை கொண்டு சக்ரா படம் உருவாக்கப்பட்டுள்ளதாக டிரைடென்ட் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்வதற்கு செப். 30 வரை தடை விதித்து உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எம் எஸ் ஆனந்தன் இயக்கிய இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தினை தயாரித்திருக்கிறது.
Facebook Comments