லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வருகிறது ’சண்டக்கோழி 2’. விஷாலுடன் கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட திருவிழா செட்டில் தொடர்ந்து 40 நாட்களுக்கு மேல் படமாக்கப்பட்டது. தொடர்ந்து திண்டுக்கல் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையில் படத்தை அக்டோபர் 18 ம் தேதி வெளியிட சங்கத்தில் அனுமதி கேட்டு இருந்தார் விஷால்.
ஆயுத பூஜை விடுமுறை நாட்களான அந்த தேதியில் சண்டக்கோழி 2 படத்தை வெளியிட அனுமதி கிடைத்து விட்டது. தீபாவளி போட்டியில் இருந்த விஷால் முன் கூட்டியே களம் இறங்குவதால் தீபாவளிக்கு விஜய்(சர்கார்), சூர்யா(என்.ஜி.கே) இருமுனை போட்டி உறுதியாகி இருக்கிறது.
Facebook Comments