ஈரோட்டில் ரூ.50000 பணத்தை போலீசிடம் ஒப்படைத்த 7 வயது சிறுவன் முகமது யாசின் என்ன படிக்க நினைத்தாலும் என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் முகமது யாசின் பள்ளிக்கு செல்லும் வழியில் 50, 000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த சிறுவன் முகமது யாசின் அதனை பத்திரமாக தனது ஆசிரியரிடம் ஒப்படைத்தார். பின்னர் ஆசிரியர் சிறுவனை அழைத்துக் கொண்டு அதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷிடம் ஒப்படைத்தார். சிறுவனின் நேர்மையை பாராட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சிறுவன் தனக்கு நடிகர் ரஜினியை நேரில் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார்.
அதன்படி சிறுவன் யாசின் தனது குடும்பத்துடனிருடன் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் அவரை சந்தித்தார். அப்போது முகமது யாசினுக்கு தங்கச் செயின் அளித்து ரஜினி பாராட்டு தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் யாசின் என்ன படிக்க நினைத்தாலும் என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் என்றார்.