
நடிகர் விஷ்ணு விஷால் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் மனைவியை கடந்த வருடம் விவாகரத்து பெற்றார்.
தற்போது விளையாட்டு வீரரான ஜூவாலா கட்டா என்ற பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக சுற்றிக் கொண்டு வருகிறார்.
இருவருக்கும் காதல் இருக்கிறதா என்று கேட்டதற்கு, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான், இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உள்ளது. திருமணம் செய்து கொள்வோமோ இல்லையா என்பதை இப்போது கூற இயலாது என்று கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.
முதலில், ஒரு தனியார் ஓட்டலில் தங்கி இருந்த ஜூவாலா தற்போது விஷ்ணு விஷாலின் வீட்டிலேயே தங்கியுள்ளாராம். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே குடும்பம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments





