Spotlightதமிழ்நாடு

உஷாரய்யா உஷாரு…. 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button