Spotlightசினிமா

1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்த ”கே ஜி எஃப் 2” அமேசான் ப்ரைமில் வெளியாகும் தேதி அறிவிப்பு!

கே ஜி எஃப் படத்திற்கு பிறகு மிகவும் அதிக எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான திரைபப்டம் தான் “கே ஜி எஃப் 2”.

நடிகர் யஷ் அவர்களின் மாஸான நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் வெளியானது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகி 1000 கோடி ரூபாய்க்கு மேல் இப்படம் வசூலை வாரிக் குவித்தது.

ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியான இப்படம் ஓடிடி தளத்திற்கு எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம், வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் “கே ஜி எஃப் 2” படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று அமேசான் வெளியிட்டது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close