Spotlightசினிமா

M குமரன் படத்தில் வரும் “நீயே நீயே….” பாடலை பாடிய கே கே திடீர் மரணம்; மேடையிலேயே உயிர் பிரிந்தது!

எம் குமரன் S/O மகாலக்‌ஷ்மி படத்தில் வரும் ’நீயே நீயே’, காக்க காக்க படத்தின் ‘உயிரின் உயிரே’ , கில்லி படத்தில் அப்படி போடு உள்ளிட்ட பல வெற்றி பாடல்களை பாடியிருப்பவர் தான் பின்னணி பாடகர் கே கே என்ற கிருஷ்ணகுமார் குன்னத். இவருக்கு வயது 53.

பல மொழிகளில் சில ஹிட் அடித்த பாடல்கள் இவரது குரலில் உருவானது தான். பல இசை நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார் கே கே.

கொல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரது உயிர் அந்த மேடையிலேயே பிரிந்தது.

இவரது இழப்பு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேகே-வின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், சின்மயி உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button