Spotlightதமிழ்நாடு

அந்நேரத்தில் தோனியின் முதல் தேர்வாக இருக்கிறார் மொயீன் அலி: ஏபி டி வில்லியர்ஸ் புகழாரம்

திங்கள்கிழமை இரவு சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 2023 டாடா ஐபிஎல்லின் அதிக ஸ்கோரிங் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியைத் இலக்கை அடையவிடாமல் தடுத்து நிறுத்தியதில் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி (4-0-26-4) நட்சத்திரமாக ஜொலித்தார்.

218 ரன்கள் என்ற இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தை முடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பந்து வீச்சில் மொயீன் அலிக்கு மிட்செல் சான்ட்னர் நன்கு உறுதுணையாக இருந்தார், அவர் 4 ஓவர்களை வீசி 21 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி ஐபிஎல் தொடரில் இரண்டு சிக்ஸர்களுடன் 5,000 ரன்களை கடந்தார்.

முன்னதாக, தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களை விளாசினார் (31 பந்துகள், 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்). இந்த சீசனில்தொடர்ச்சியாக ருதுராஜ் கெய்க்வாட் அடித்துள்ள 2வது அரை சதம் இதுவாகும். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 28 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். பதிலுக்கு துரத்தலின் போது லக்னோ அணியானது 5.2 ஓவர்களில் 79 ரன்களுக்கு வலுவான தொடக்கத்தைப் பெற்றனர், தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 22 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து மொயீன் அலியிடம் அவுட்டானார். மிகவும் அனுபவம் வாய்ந்த இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான மொயீன் அலி அதன் பின்னர் கேப்டன் கே.எல். ராகுல், க்ருனால் பாண்டியா மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரையும் வெளியேற்றினார். இது சிஎஸ்கே போட்டியின் பிடியை ஒருபோதும் இழக்கவில்லை என்பதை உறுதிசெய்தது.

ஜியோ சினிமா ஐபிஎல் நிபுணர் ஏபி டி வில்லியர்ஸ் பேசுகையில், சுழற்பந்து வீச்சாளரைப் பாராட்டி, மொயீன் அலியின் விக்கெட் எடுக்கும் திறனை எம்எஸ் தோனி எப்படி நம்புகிறார் என்பதை எடுத்துக்காட்டினார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,”எப்போதும் தோனியின் முதல் தேர்வு மொயீன் அலி தான். அவர், அழுத்தத்தின் கீழ் சென்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் சற்று முன்னதாகவே பந்துவீசியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன், ஆனால் எம்எஸ் தோனி மாஸ்டர் மற்றும் குரு, அவருக்கு எப்போது யாரை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது நன்றாகத் தெரியும்.

மற்றொரு ஜியோசினிமா ஐபிஎல் நிபுணர் சுரேஷ் ரெய்னா மொயீன் அலியின் மேட்ச் வின்னிங் திறனைப் பாராட்டினார். அவர் கூறும்போது”மொயீன் அலி பந்து வீசும் போதெல்லாம், அவர் பந்தை பேட்ஸ்மேன்களிடம் இருந்து விலக்கி வைப்பார், தோனிக்கு இது தெரியும், ஏனெனில் கேஎல் ராகுல் இந்தியாவுக்கு ஒரு முக்கியமான வீரர் மற்றும் ஐபிஎல்லில் 600 ரன்களை அடித்த முக்கியமான வீரர்,” என்று அவர் கூறினார்.

தோனியின் தனிப்பட்ட மைல்கல் 5,000 ரன்களை மற்றொரு ஜியோசினிமா ஐபிஎல் நிபுணரான ராபின் உத்தப்பா பாராட்டினார். வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு எதிராக இரண்டு சிக்ஸர்கள் அடிப்பதில் உள்ள சிரமத்தைப் பற்றி அவர் பேசினார். இதுதொடர்பாக ராபின் உத்தப்பா கூறும்போது,”உலகின் அதிவேக பந்துவீச்சாளர் முன்பக்கத்தில் இருந்து தோனிக்கு பந்துவீசுகிறார். தோனிக்கு 41 வயதாகிறது.இந்த வயதில் மார்க் வுட் 145-147 கி.மீ. வேகத்தில் வீசிய 2வது பந்தை ஸ்கொயர் லெக்கில் சிக்ஸர் விளாசினார். அதுவும் ஒற்றை காலை பயன்படுத்தி அடித்தார். இது எளிதானது அல்ல.

ஆரஞ்சு தொப்பிக்கான வேட்டையில் தொடர்ந்து இருக்கும் கைல் மேயர்ஸ் தொடர்ச்சியாக தனது இரண்டாவது அரைசதத்தை அடித்தார். டி வில்லியர்ஸ் மேயர்ஸின் தொழில் நுட்பத்தைப் பற்றி பேசினார்: இதுகுறித்து அவர் கூறும்போது,” கைல் மேயர்ஸ் தனது பின்னங்காலை கீழே வைக்கிறார், அது அவரது ஷாட்களுக்கு ஒரு நங்கூரம் ஆகும். அவர் ஏறக்குறைய தனது முன் பாதத்தால் சிறிது சிறிதாகப் பாய்ந்து, தரையுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார். இதுதான் அவர், பந்தை மைதானத்தின் எந்த பகுதிக்கும் விளாச அவருக்கு உதவுகிறது. அவர் நிற்கும் போது, அவரது தலை அழகாகவும் நிமிர்ந்தும் இருக்கும்,தொழில் நுட்பம் இருக்கிறது மற்றும் அவரது ஸ்டோக்ஸ் மாயாஜாலமானது.” என்றார்.

டாடா ஐபிஎல் தொடரில் செவ்வாய் கிழமையான இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை ஜியோசினிமாவில் நேரலையில் காணலாம்

Facebook Comments

Related Articles

Back to top button