Spotlightசினிமா

ஹிந்தி நடிகர்கள் மட்டும் தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா..?? மோடியை சாடிய ராம் சரணின் மனைவி!

மீபத்தில் பாலிவுட் நட்சத்திரங்களை சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணின் மனைவி உபாசனா, தனது வேதனையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

” டியரஸ்ட் நரேந்திர மோடி ஜி , தென்னிந்தியாவில் இருக்கும் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கிறோம். உங்களை பிரதமராக கொன்டதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ஆனால் பெரிய ஆளுமைகள் , பழைய கலாச்சார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. தென்னிந்திய சினிமா முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவே நாங்கள் உணர்கிறோம்.

நான் என் உணர்வுகளை மிகவும் வேதனையுடன் இங்கே வெளிப்படுத்துகிறேன். இது சரியான மனநிலையில் ஆக்கப்பூர்வமான முறையில் எடுக்கப்பட்டதாகவே நம்புகிறேன்… ஜெய்ஹிந்த்..!” என்று குறிப்பிட்டுள்ளார், உபாசனா…

Facebook Comments

Related Articles

Back to top button