Spotlightவிமர்சனங்கள்

காதலிக்க நேரமில்லை – விமர்சனம் 3.5/5

வணக்கம் சென்னை,காளி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி அதனைத் தொடர்ந்து காதலிக்க நேரமில்லை என்ற படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

இப்படத்தில், ஜெயம் ரவி, நித்யாமேனன், வினய், யோகி பாபு, லால், டிஜே பானு, ஜான் கொக்கேன், வினோதினி வைத்தியநாதன், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

கதையின் நாயகனான ஜெயம் ரவியும் டிஜே பானுவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். பானுவிற்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை. ஆனால், ஜெயம் ரவிக்கு இதில் உடன்பாடில்லை.. இதனால், இருவரும் பிரிந்துவிடுகிறார்கள்.

நித்யாமேனனும் ஜான் கொக்கனும் காதலர்கள். இதில் நித்யா மேனனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை. ஜான் கொகேன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து கொண்ட நித்யா மேனன், ஜான் கொக்கனை விட்டு பிரிகிறார்.

இச்சமயத்தில் நித்தியாமேனன் ஐ வி எஃப் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறார். இந்நேரத்தில் நித்யா மேனன், ஜெயம் ரவியை சந்திக்கிறார். இருவரும் நட்புக் கொள்கிறார்கள். நட்பானது பின் காதலாக மாறுகிறது.

இருவரின் காதல் கைகூடியதா இல்லையா என்பதே படத்தின் கதை.

நாயகன் ஜெயம் ரவி கதையின் நாயகனாக இக்கதைக்கு ஏற்ற நாயகனாக மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நித்யாமேனனுடனான காதலை மிகவும் இயல்பாக கொடுத்து நம்மை கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார் ஜெயம் ரவி.

தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன் இப்படத்தில் தனது அசாத்திய நடிப்பை கொடுத்து அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார். ஜெயம் ரவியுடனான காட்சிகளில் தனது க்யூட் எக்ஸ்ப்ரஷன் மூலம் ஜொலித்திருக்கிறார் நித்யா.

டிஜே பானுவிற்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் தனது நடிப்பை சிறந்த முறையில் கொடுத்திருக்கிறார். வழக்கம்போல யோகி பாபு நம்மை சிரிக்க வைக்கிறார். அவருடன் பயணிக்கும் வினய்க்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார்.

படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றால் அது ஏ ஆர் ரகுமானின் இசை மட்டுமே. துள்ளலான பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் தனக்கே உரித்தான பாணியில் இசையை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறார் ஏ ஆர் ரகுமான். படத்திற்கு மற்றொரு பில்லராக வந்து நிற்கிறது ஒளிப்பதிவு.

இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஒரு கவித்துவமான காதல் கதையை எடுத்துக்கொண்டு அதை மிகவும் நேர்த்தியாக இயக்கவும் செய்திருக்கிறார். கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு கதையை கையில் எடுத்து, மிகவும் மெல்லியக்கோட்டின் மேல் நடப்பது போன்று காதலை அவ்வளவு கவனமாக எடுத்துச் சென்று அதை வெல்லவும் வைத்திருக்கிறார்.

மொத்தத்தில்,

காதலிக்க நேரமில்லை – காதலர்களுக்கான விருந்து

Facebook Comments

Related Articles

Back to top button