Uncategorized

பிரதமர் மோடிக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் வாழ்த்து…

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்த இந்திய தேசத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பாரதிய ஜனதா கட்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒருவர் பிரதமராகும் வாய்ப்பு இப்போதுதான் வாய்த்திருக்கிறது.

நடந்து முடிந்த தேர்தலில் பொதுமக்களின் பேராதரவுடன் அமோக வெற்றி பெற்று அமோகமான முறையில் மீண்டும் பிரதமர் பதவி ஏற்றிருக்கிறார் திரு. நரேந்திர மோடி.இந்த சூழலில் இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் அவருக்கு மனப்பூர்வமான இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அனைத்து தரப்பு சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக பிரதமர் இருப்பார் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு.எனவே வரும் காலங்களில் ஒரு வசந்த காலத்தை உருவாக்கும் வகையில் பிரதமர் செயல்படுவார். அமைதியும், சமாதானமும் இந்தியாவின் இறையாண்மையும் கட்டிக் காக்கப்படும் என்ற நம்பிக்கையை தரும் வகையில் பிரதமரின் பணி இருக்கும் என்று நம்புகிறோம்.மீண்டும் அனைத்து இஸ்லாமியர்களின் சார்பில் ஹஜ் அசோசியேசன் பிரதமருக்கு மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இப்படிக்கு,
தலைவர்,
பிரசிடெண்ட் அபூபக்கர் இந்திய ஹஜ் அசோசியேஷன்

Facebook Comments

Related Articles

Back to top button