Spotlightஇந்தியாதமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள் – 08/09/18

இன்றைய விலை: பெட்ரோல் ரூ.83.13 ; டீசல் ரூ.76.17

டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் 24 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு

திருப்பூர் மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி போராட்டம்

குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களை கேட்டு அமலாக்கத்துறை சிபிஐக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ரவுடி புல்லட் நாகராஜன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்

மு க ஸ்டாலின் திமுக தலைவரான பிறகு முதன் முறையாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது

கடைமடைக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மன்னார்குடியில் இருந்து முக்கொம்புக்கு பேரணி சென்ற விவசாயிகள் தடுத்துநிறுத்தம்

Facebook Comments

Related Articles

Back to top button