Spotlightசினிமா

ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற சதாவின் ‘டார்ச் லைட்’!

விஜய் நடித்த ‘தமிழன் ‘பட இயக்குநர் அப்துல் மஜீத் இயக்கியுள்ள படம் ‘டார்ச் லைட்’ . சதா மற்றும் பிக்பாஸ் ரித்விகா இப்படத்தில் முன்னனி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர்.

பாலியல் தொழிலை பற்றிய படம் என்பதால் எளிதாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இப்படத்தின் ட்ரெய்லர் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகமானது என்பது எளிதாக புரிந்தது.

இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகியது. சென்னையில் அநேக திரையரங்குகளில் திரையிடப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல ஒரு ரிசல்டை கொடுத்துள்ளது. அனைவரும் இப்படத்தினை கண்டிப்பாக பார்க்க வேண்டும் எனவும் ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை தெரிவித்தனர்.

இப்படத்தில் துணிச்சலாக நடித்த நாயகி சதாவை அவர்கள் வெகுவாக பாராட்டினர்.

Facebook Comments

Related Articles

Back to top button