
2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில்,
2021-22ம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக நெல் சாகுபடி உயர்ந்துள்ளது; மாவட்ட வாரியாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் உயர்மட்ட குழு மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரிதளவில் உணரப்படுகிறது; தமிழ்நாட்டுக்கு இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்; இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறுவை சாகுபடி திட்டத்தால் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
சிறுதானியங்கள், எண்ணெய் விதைகள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். 2020-2021ம் ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 9.26 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,055 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு.
3,204 கிராம ஊராட்சிகளில் ரூ.300 கோடி மாநில அரசின் நிதியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.
இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக நம்மாழ்வார் இயற்கை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டு, அரசு விதை பண்ணைகளில் 200 ஏக்கரில் உற்பத்தி செய்ய 20,000 விவசாயிகளுக்கு மானிய அளவில் நிதி. இதற்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு.
ரூ.5 கோடி மதிப்பில் 60,000 விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்க நடவடிக்கை.
நடப்பாண்டில் நஞ்சற்ற, நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்திட இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு.
சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்.
தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.10.25 கோடி உழவர் சந்தைகளின் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டத்திற்கு ரூ.5 கோடி
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ₹195 வழங்கப்படும்; கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2950 கரும்பு சாகுபடிக்கு உதவியாக ரூ. 10 கோடியில் உபகரணங்கள் வழங்கும் திட்டம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க, விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும்.
50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ. 15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு சென்னை, திருச்சியில் நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க ரூ. 15 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு ரூ 5157 கோடி வழங்கப்படும் டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ கால்வாய்கள் தூர்வாரும் பணிகளுக்கு ரூ. 80 கோடி ஒதுக்கீடு அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு