தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி சற்று முன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு பேசிய முதல்வர், ‘கொரோனா தாக்கம் படிப்படியாக உயர்ந்து பின்னர் தான் குறையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கண்ணுக்குத் தெரியாத வைரஸ் எளிதாக பரவும் என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம்.
பொது மக்கள் ஒத்துழைப்பின்றி கொரோனாவை கட்டுப்படுத்துவது எளிதல்ல.
குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
எந்த அளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்களோ அந்த அளவிற்கு ஊரடங்கை தளர்த்தி இயல்பு நிலைக்கு வர முடியும்.
பொதுமக்களுக்கு எந்தெந்த வழிகளில் உதவ முடியுமோ அந்தந்த வகைகளில் அரசு உதவியது..
தனிமனித இடைவெளி,மாஸ்க் அணிதல் போன்றவிதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும்; பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்.
மே மாதத்தை போல ஜூன் மாதத்திலும் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும்’. என்று கூறினார்.