
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் ‘துக்ளக் தர்பார்’.
படம் நேற்று சன் டிவியில் நேரடியாக வெளியானது. இன்று ஓடிடி தளத்திலும் வெளியானது.
கதைக்களம்: நாயகன் விஜய் சேதுபதி தனி ஒருவன் படத்தில் வருவது போல் பார்த்திபன் பங்கேற்ற ஒரு அரசியல் கூட்டத்தில் பிறக்கிறார். அங்கு பிறக்கும் விஜய் சேதுபதிக்கு சிங்கார வேலன் என பெயரிடுகிறார் பார்த்திபன்.
இவருக்கு பிறகு தங்கையாக மஞ்சிமா மோகன் பிறக்கிறார். மஞ்சிமா மோகன் பிறக்கையில் தான் தன் தாய் இறந்து விட்டதாக விஜய் சேதுபதி அவரிடம் பல வருடங்கள் பேசாமலேயே இருக்கிறார்.
தந்தையும் சில நாட்களில் இறந்து விட, வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார் மஞ்சிமா.
கட்சி மட்டுமே உயிராக நினைத்து, கட்சியில் பணிபுரிந்து வருகிறார் விஜய் சேதுபதி. அமைதிப்படை படத்தில் வரும் சத்யராஜ் கேரக்டரை போல், கட்சியில் இடம் பிடிக்க ஒரு சிலரின் காலைவாரி மேலே வருகிறார் விஜய் சேதுபதி.
அதில் பெரும் பதவியை அடைய அவர் என்னவெல்லாம் செய்தார்,யாருடைய பகையை சம்பாதித்தார்? இவருக்குள் ஏற்படும் பிரச்சனை என்ன?இவரின் எண்ணம் நிறைவேறியதா?என்பதே மீதிக்கதை.
விஜய் சேதுபதி வழக்கம் போல் நடிப்பில் அசத்திவிட்டார். முதலில் ஒரு வில்லத்தனத்தை செலுத்தி, அதன் பிறகு நாயகனாக மாறுவது என அதை செவ்வனே செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் சற்று ஓவர் ஆக்டிங்கை விஜய் சேதுபதி குறைத்திருக்கலாம்.
அரசியல் கட்சி தலைவராக வரும் பார்த்திபன் தனக்கே உரிய நக்கல் நய்யாண்டி கலந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.அச்சு அசல் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்.
பகவதி பெருமாள் சில காட்சிகளே வந்தாலும் ஹீரோ விஜய் சேதுபதியுடன் தகராறு செய்யும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஹீரோயினாக ராசி கண்ணா வழக்கம் போல வந்து செல்கிறார்.மஞ்சிமா மோகனுக்கு படத்தில் இரண்டு வசனங்கள் தான். எதற்கு இந்த கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டார் என்று தெரியவில்லை.
இவரும் வந்துவிட்டு செல்கிறார். ஹீரோவின் நண்பனாக வரும் கருணாகரன் ரசிக்க வைக்கிறார்.
கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மற்றும் பின்னனி இசை ஓகே ரகம் தான் .
இரண்டாம் பாதியில் திரைக்கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவு கலர்புல்லாக காட்சி கொடுத்திருக்கிறார்கள்.
சற்று விறுவிறுப்பை ஏற்றி இன்னும் அதிகமாக ரசிக்க வைத்து கொண்டாட வைத்திருக்கலாம்..
துக்ளக் தர்பார் – விறுவிறுப்பு குறைவு…





