
பாலாவின் இயக்கத்தில் த்ருவ் விக்ரம் மற்றும் மேகா நடிப்பில் உருவாகியுள்ளது ‘வர்மா’. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தினை சக்திவேல் ஃபிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார். சில நேரத்திற்கு முன் இச்செய்தியை அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தினையும் இந்நிறுவனமே தமிழகம் முழுவதும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments





