72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க மூவர்ண தேசியக்கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி, முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதன் பின் உரையாற்றிய அவர், “எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் பக்கபலமாக இருக்கிறார்கள். பாஜக ஆட்சியில் எய்ம்ஸ், ஐஐடிக்களை ஏற்படுத்தியுள்ளோம், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை இந்த அரசு உறுதி செய்துள்ளது. அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் களங்கரை விளக்கமாக உள்ளது” என்று பேசினார்.
Facebook Comments