Spotlightசினிமா

”96” படத்தின் ரீமேக்கில் நானி & சமந்தா!

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ளது “96”. படம் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். இதற்கு மகேந்திரன் ஜெயராஜு – சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளனர், கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் இதனை தயாரித்துள்ளார்.

சமீபத்தில், படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு கைப்பற்றினார். தற்போது, தெலுங்கு வெர்ஷனில் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க நானி, சமந்தா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் ஷூட்டிங்கை டிசம்பர் மாதம் துவங்கவுள்ளனர். வெகு விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button