Spotlightசினிமா

ஜருகண்டி விமர்சனம் 2.25/5

கார் வாங்கிக் கொண்டு மாத சந்தா(due) கட்டாதவர்களின் கார்களை பறிமுதல் செய்யும் வேலையை செய்து வருபவர் தான் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜெய். அந்த வேலை அவரை விட்டு போக, உயிர் நண்பன் டேனியலோடு சேர்ந்து ட்ராவல்ஸ் தொடங்குகிறார். அதற்கு, வங்கியில் இளவரசு மூலம் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பணம் வாங்குகிறார்.

அது அவருக்கு எப்படி ஒரு பேரடியாக விழுந்து, எப்படி அவரது வாழ்க்கையை மாற்றியது என்பது தான் படத்தின் கதை, இதில் நாயகியும் உள்ளே நுழைய, அவரையும் எதிரிகளிடம் இருந்து ஜெய் காப்பாற்றினாரா இல்லையா என்பதும் படத்திம் கதைதான்.

காதல் காட்சிகளில் அவார்ட் வாங்கிய ‘ஜெய்’ எதற்காக ஆக்‌ஷன் காட்சிக்கு இறங்குகிறார் என்று புரியவில்லை. அவரின் ஆக்‌ஷன் காட்சிகள் ஒன்று கூட படத்தில் எடுபடாமல் போய்விட்டது. துறுதுறுவென நடிப்பு, படபடவென பேச்சு என அனைத்தும் ஜெய்யிடம் இருக்கும் என்று எதிர்பார்த்து இப்படத்திற்கு சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும்..

மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்தாலும், தலைக்கு மேல் அவ்வளவு பிரச்சனைகள் இருந்து அசால்ட்டாக திரிவது என நாயகியின் (ரெபா மோனிகா ஜான்) நடிப்பு கொஞ்சம் சோதனை செய்கிறது. டேனியின் அசால்ட் காமெடி, மெட்ராஸ் மொழி என கொஞ்சம் ரசிக்க வைத்தாலும், ஓவர் டோஸ் ஆகிவிட்ட ஒரு ஃபீல்..

படத்தில் சிறிது நேரம் உட்கார வைப்பது, ரோபோ சங்கரின் காமெடி மட்டும்தான். பின்னனி இசையும் மிரட்டல்.. பாடல்கள் எடுபடவில்லை.

நூடுல்ஸ் போன்று கதை குழம்பிக் கொண்டே செல்கிறது. ஒரு அளவுக்கு மேல் வரும் ட்விஸ்ட்களால் போரடித்து விடுகிறது. அதுவும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் 15 செகண்ட்டில் 20 பெரை ஜெய் பந்தாடுவது, அட போங்கப்பா சிரிப்பு தான் வருது..

மண்ட கசாயம்… மண்ட காய்ஞ்சி போச்சுப்பா…

Facebook Comments

Related Articles

Back to top button