
விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘சர்கார்’. கடந்த தீபாவளி தினத்தில் வெளியான இப்படம், அதிமுக அரசின் போராட்டத்தால் படத்திற்கு விளம்பரம் கிடைத்து, இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ.2.37 கோடியும், 2–வது நாள் ரூ. 2.32 கோடியும் வசூலித்துள்ளது. தொடர்ந்து ரூ.2 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் துப்பாக்கி, கத்தி, பைரவா, தெறி, மெர்சல் ஆகிய படங்கள் வசூலில் ரூ.100 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது.
அந்த வரிசையில், சர்கார் படமும் சேர்ந்துள்ளது. சர்கார் படம் ரூ.200 கோடி வரை வசூல் ஈட்டும் என்று எதிர்பார்ப்பதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, ‘‘சர்காருக்கு எதிரான போராட்டம் படத்துக்கு பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது. வசூலில் பாதிப்பு ஏற்படவில்லை. எதிர்ப்புக்கு பிறகு படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு கூட்டம் அதிகம் வருகிறது. 3 நாட்களில் வசூல் ரூ.125 கோடியை தாண்டி உள்ளது’’ என்றார்.




