
தென்காசி மாவட்டம் விகே புதூர் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். நேற்று மாலை நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
15 தினங்களுக்கு முன் காவல்துறையினர் குமரேசனை அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு, அவர் இரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.
பிறகு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்திருக்கிறார். இதற்கு காரணம் போலீஸார் குமரேசனை தாக்கியதால் தான் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் விடிய விடிய போராட்டத்தில் இறங்கினர். உடன், போலீஸ் உயரதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
Facebook Comments