Spotlightசினிமா

மர்மம் நிறைந்த த்ரில்லர் கதைதான் இந்த ‘மஹா’!

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக மதியழகன் தயாரிக்க ‘மஹா’ படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா.

படத்தினை பற்றி மதியழகன் கூறுகையில், ‘ஒரு தயாரிப்பாளராக மிகக் கடுமையாக பணிபுரியும் இந்த குழுவை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். ஒரு தயாரிப்பாளரை ஊக்கப்படுத்தும் முதல் விஷயம், படக்குழுவினர் சொன்ன தேதிக்குள் முடித்துக் கொடுக்கும் போது தான். இயக்குனர் ஜமீல், ஹன்சிகா மொத்வானி, ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் மற்றும் குழுவில் உள்ள அனைவரின் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார்.

“வழக்கமாக சினிமாவில், திறமையான கலைஞர்களை இயக்குநரின் நடிகர், தயாரிப்பாளரின் இயக்குனர் என்ற அடைமொழியுடன் குறிப்பிடுவார்கள். ஆனால் நான் தொடர்ந்து பெரும் பொறுப்புடன் செயல்படும் ஒரு தயாரிப்பாளரின் குழுவைக் கொண்டிருக்கிறேன் என கருதுகிறேன். இது எனக்கு ஒரு நேர்மறையான உணர்வைத் தருகிறது. இப்போதே எனக்கு படத்தின் தரம் கண் முன்னால் தெரிகிறது” என்றார்.

தயாரிப்பாளர் மதியழகன் வெவ்வேறு நிலைகளில் உருவாகி வரும், நயன்தாராவின் கொலையுதிர் காலம், அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ என நல்ல தரமான படங்களை தயாரித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைக்க, ஹன்சிகா மொத்வானி நடிக்கும் ‘மகா’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அம்சங்களை கொண்ட ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button