
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்த இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடி தாக்குதலை நடத்தின.
தீவிரவாதிகள் முகாம் மீது, 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1,000 கிலோ வெடிகுண்டு வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்திய விமானப்படையின், தாக்குதல் பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியத் திரைப்படங்களுக்கு பாகிஸ்தான் திரைப்பட விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இந்தியப் படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹூசைன் கூறியுள்ளார்.





